பாலக்கோடு மூங்கப்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி, - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஏப்ரல், 2025

பாலக்கோடு மூங்கப்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி,


தர்மபுரி, ஏப்ரல் 29:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள மூங்கப்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாய பண்ணையில் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு அனுபவத்துடன் கூடிய பயிற்சி முகாம் நடைபெற்றது.


வாணவராயர் வேளாண்மை கல்லூரி, கோயம்புத்தூர்-இல் இறுதியாண்டில் இளங்கலை வேளாண் அறிவியல் பயிலும் மாணவர்கள், “கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டம்” (RAWE) நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மூங்கப்பட்டியில் உள்ள முன்னணி இயற்கை விவசாயியான கந்தன் அவர்களின் பண்ணையை பார்வையிட்டு கள பயிற்சியில் ஈடுபட்டனர்.


5 ஏக்கர் பரப்பளவில், மஞ்சள், ராகி, உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு போன்ற பயிர்களை சுழற்சி முறையில் பயிரிட்டு வரும் விவசாயி கந்தன், கடந்த 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் தீவிரமாக செயல்பட்டு, பல விவசாயிகளுக்குப் முன்னோடியாக திகழ்கிறார்.


பயிற்சியின் போது மாணவர்களுக்கு,
🔹 இயற்கை வேளாண்மையின் அடிப்படை கோட்பாடுகள்,
🔹 பசுமை உர உற்பத்தி,
🔹 பூச்சி மற்றும் நோய் மேலாண்மை,
🔹 நீர் மேலாண்மை,
🔹 பராமரிப்பு முறைகள்

போன்ற முக்கிய அம்சங்களை விவரித்துக் கூறிய விவசாயி கந்தன், இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களின் நன்மைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்,

“நாங்கள் நூலில் படித்த விஷயங்களை நேரில் அனுபவித்தோம். இயற்கை வேளாண்மை ஒரு புதிய நோக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தது,”
என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்வு கிராமத்து அறிவையும், புதிய தலைமுறையின் தேடலையும் இணைக்கும் பாலமாக அமைந்தது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad