சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தொலைக்காட்சி புகழ் ஈரோடு மகேஷ், மாணவர்கள் கல்லூரி நினைவுகளை பகிர்ந்து பேசினார். கல்லூரியின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, இந்த ஆண்டில் சேரும் 25 மாணவர்களுக்கு 3 ஆண்டு கல்விக் கட்டணம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என்றும், முன்னாள் மாணவர்கள் ஏழ்மை நிலையில் உள்ள திறமையான மாணவர்களை பரிந்துரை செய்யலாம் என்றும் நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.
விழாவில் முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். விழா முடிவில் கல்லூரி முதல்வர் எஸ். கோவிந்தராஜன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணை முதல்வர் எம். ஸ்ரீதரன், நிர்வாக அலுவலர் விஜய் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக