Type Here to Get Search Results !

கொள்ளுப்பட்டி கிராமத்தில் டிராக்டர் ரொட்ட வேட்டரில் சிக்கி விவசாயி உயிரிழப்பு – கிராமத்தில் சோகம்.

பாலக்கோடு, ஏப்.17:

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொள்ளுப்பட்டி கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற துயரமான விபத்தில், விவசாயி ஒருவர் டிராக்டர் ரொட்ட வேட்டரில் சிக்கி தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்தவர் விஜய் (32), இவர் கொள்ளுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இயற்கை மற்றும் பாரம்பரிய முறையில் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த இவர், சொந்தமாக வைத்திருந்த டிராக்டரின் மூலம் தன்னுடைய நிலத்தில் உழவு பணியை மேற்கொண்டு வந்தார்.


இன்றைய தினம் (ஏப்ரல் 17) அதிகாலை 6 மணி அளவில், தனது நிலத்தில் உழவு பணிக்காக விஜய் டிராக்டரை இயக்கிய பின்னர், அதன் பின்புறத்தில் சென்று ரொட்ட வேட்டரின் கொக்கியை மாற்ற முயற்சித்துள்ளார். அந்த நேரத்தில் திடீரென நிலை தடுமாறிய அவர், ரொட்ட வேட்டர் மேல் விழுந்ததாக கூறப்படுகிறது. வெடிக்கோலும் வேட்டரின் வேகமும் காரணமாக, அவர் அங்கங்கே உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டு, தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, விஜயின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனுடன் தொடர்புடைய வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


விவசாயி விஜயின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும், ஊரையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. ஒரு குடும்பத்தின் உயிரான விவசாயியின் இழப்பு, கிராம மக்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய துயர சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில், விவசாயிகள் உழவு பணியில் இறங்கும் முன் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவது அவசியம் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies