அதையடுத்து, இன்று காலை நல்லம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதியமான்கோட்டை காவல் துறையினர் அளித்த அனுமதியுடன், தருமபுரி பச்சையம்மன் மயானத்தில், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வை 'மை தருமபுரி அமரர் சேவை அமைப்பின்' சார்பில் நடத்தப்பட்டு, பாட்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. சமூக சேவையை நோக்கமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் மூலம் இதுவரை 140 ஆதரவற்ற மற்றும் ஏழ்மையில் உயிரிழந்தோரின் உடல்கள் மதிப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இறுதி சடங்குகளில் அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மற்றும் உறுப்பினர்கள் செந்தில், மருத்துவர் முஹம்மத் ஜாபர், ஜெய் சூர்யா, பிரபு, சிவா, சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று பாட்டிக்கு மரியாதை செலுத்தினர். சமூகத்தில் ஆதரவின்றி இருப்பவர்களுக்கு உறவாகவே இருக்கின்றது ‘மை தருமபுரி’ அமைப்பினர் என்ற பாராட்டை மக்களிடையே பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக