ஓமல்நத்தம் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஏப்ரல், 2025

ஓமல்நத்தம் பள்ளியில் மாணவர்களின் அடிப்படை கற்றல் திறன்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.


தருமபுரி, ஏப்ரல் 29:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குள் உள்ள ஓமல்நத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலம் வாசித்தல் திறன், கணிதத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட அடிப்படைக் கற்றல் திறன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித் துறையின் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த எண்ணும் எழுத்தும், திறன்மிகு வகுப்பறைகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் மாணவர்களின் கற்றல் திறன்களை வளர்க்கும் முக்கிய சாதனமாக உள்ளன.”

பாடங்களைத் தமிழில் எடுத்துரைக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார். “ஆசிரியர்கள் ஆங்கிலப்பாடங்களை கற்பிப்போது அதன் பொருளை தமிழில் எடுத்துரைக்கும் பழக்கம் வேண்டும். இதனால் மாணவர்களுக்கு பாடத்தின் உள்ளடக்கம் தெளிவாக புரியும். ஆசிரியர்கள் தங்களது பணி மீது முழு அற்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும்,” என்றும் தெரிவித்தார்.


இவ்வாய்வின் போது பள்ளியில் நடைபெறும் வாசித்தல் பயிற்சிகள், கணிதப்பாடக் கற்றல், ஆசிரியர்களின் பாடக்கற்பித்தல் முறை போன்றவை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யப்பட்டன.


மாநில அளவில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்கள், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி கிடைக்கிறது என்ற நம்பிக்கையை பெற்றோரிடையே ஏற்படுத்தும். இது மாணவர்களை அரசு பள்ளிகளுக்கே திரும்ப வழிவகுக்கும் ஒரு ஊக்குவிப்பு நடவடிக்கையாகும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad