நியமிக்க உள்ள 114 பணியிடங்களில் 5 முதன்மை அங்கன்வாடி பணியாளர், 20 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 89 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. வட்டார வாரியாக பணியிடங்களின் விவரம் மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி அலுவலகங்களில் வைக்கப்படும் தகவல் பலகைகளில் ஒட்டப்படும்.
விண்ணப்பதாரர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 23.04.2025 மாலை 5.00 மணி ஆகும். விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட குழந்தைகள் மையம் அமைந்துள்ள வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்திலேயே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். கல்வித் தகுதியாக முதன்மை மற்றும் குறு அங்கன்வாடி பணியாளருக்கு 12ஆம் வகுப்பு மற்றும் அங்கன்வாடி உதவியாளருக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு பொதுவாக 25 முதல் 35 (அ) 40 வயது வரை விதவைகள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்காக, மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதலாக 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி உதவியாளர் பணிக்கான வயது வரம்பு 20 முதல் 40 (அ) 45 வரை வகுக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்தவர்கள் உரிய சான்றிதழ்கள் (பள்ளி மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதார், சாதிச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, விதவை சான்று, மாற்றுத் திறனாளர் சான்று) சுய சான்றொப்பமிட்டு இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் 12 மாதங்களுக்கு தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட பின்னர் சிறப்பு காலமுறை ஊதியத்தில் மாற்றம் செய்யப்படும். முதன்மை பணியாளருக்கு ரூ.7,700 முதல் ரூ.24,200 வரை, குறு பணியாளருக்கு ரூ.5,700 முதல் ரூ.18,000 வரை, உதவியாளருக்கு ரூ.4,100 முதல் ரூ.12,500 வரை ஊதியம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அழைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக