ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பம், மாற்றிய அதிகாரிகள்; நன்றி தெரிவித்த பொதுமக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 9 ஏப்ரல், 2025

ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பம், மாற்றிய அதிகாரிகள்; நன்றி தெரிவித்த பொதுமக்கள்.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மானியத அல்லி ஊராட்சி கீழ்ப்பட்ட மேல் ஈசல்பட்டி கிராமம் மற்றும் அருந்ததியர் காலனியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக குடியிருப்புப் பகுதியை அண்மித்த மின் கம்பம் பழுதடைந்த நிலையில் இருந்தது. பொதுமக்கள் தொடர்ச்சியாக இதனைப் பற்றி புகார் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில், கடந்த மாதம் மேல்புரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த மு. வார்டு உறுப்பினரும் கேபிள் ஆபரேட்டருமான திரு. பு. சந்திரகாந்த் புஷ்பராஜ் நேரில் சென்று நிலைமை ஆய்வு செய்தார். பின்னர், சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கத் தூண்டினார்.


அதனையடுத்து, மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக செயல்பட்டு பழுதடைந்த மின் கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பத்தை பொருத்தினர். இதன் மூலம், அப்பகுதியில் மின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது.


மின் வாரியத்தின் வேகமான பதிலும், மேற்கொண்ட நடவடிக்கையிலும் திருப்தியடைந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad