Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே கர்த்தாரஅள்ளியில் துவங்கப்பட்ட சுங்க சாவடியில் கட்டணத்தில் விலக்கு அளிக்க கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் முற்றுகை போராட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கர்த்தாரஅள்ளியில் புதியதாக துவங்கப்பட்ட  சுங்க சாவடியில் சுங்க கட்டணத்தில் விலக்கு கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் 500க்கும் மேற்பட்டோர் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நகர செயலாளர் விக்னேஷ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் விஜயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில்  தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில்  அதியமான்கோட்டை முதல் ஓசுர் வரை புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வந்த நிலையில் முழுமையாக சாலை அமைக்கும் பணிகள் நிறைவடையாத நிலையிலும், கழிப்பறை வசதிகள் செய்து தரப்படாத நிலையிலும், திடிரென எவ்வித முன் அறிவிப்பும் இன்றி கடந்த 20ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலையை  பயன்படுத்தும் வாகனங்களுக்கு கர்த்தாரஅள்ளி  சுங்க சாவடியில் சுங்க  கட்டணம் வசூலிக்கபட்டு வருவதாகவும், சாலை அமைக்கும் போது பாலக்கோடு சுற்றி உள்ள பகுதிகளுக்கு சுங்க கட்டணத்தில் விலக்கு அளிப்பதாக தெரிவித்திருந்ததாகவும், தற்போது வாக்குறுதியை மீறி சுங்க கட்டணம் வசூலிப்பதால் பாலக்கோடு சுற்றி 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், சர்க்கரை ஆலைக்கு செல்லும் கரும்பு வாகனங்கள், தர்மபுரிக்கு செல்லும் வாகனங்கள்  உள்ளிட்டவைகளுக்கு ஓரே சுங்க கட்டணம் என்பது அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் எனவும், பாலக்கோடு சுற்று வட்டார மக்களுக்கு   சுங்க கட்டணத்தில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி  சுங்க சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பாலக்கோடு டி.எஸ்.பி மனோகரன் தலைமையிலான  இன்ஸ்பெக்டர்கள் பாலசுந்தரம், சுப்ரமணியம், வீரம்மாள் உள்ளிட்ட போலீசார் த.வெ. க. தொண்டர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த போராட்டத்தில்  மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்கள் தொண்டர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies