Type Here to Get Search Results !

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலங்களின் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று தண்ணீர் திறந்து வைத்தார்கள்.


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலங்களின் பாசனத்திற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலையில் இன்று (03.03.2025) தண்ணீர் திறந்து வைத்தார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து தருமபுரி மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 2050 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகள் 3280 ஏக்கர் நிலமும் ஆக மொத்தம் 5330 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் 03.03.2025 முதல் 11.05.2025 வரை 70 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கிராமம், கம்மம்பட்டி கிராமம் மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள செக்காரப்பட்டி கிராமம், வெள்ளார் கிராமம், தெத்திகிரிப்பட்டி கிராமம், மல்லிகுந்தம் கிராமம் என மொத்தம் 6 கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. விவசாயத்திற்கு பொதுமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றும், நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், விவசாய பொதுமக்கள் நீர்வளத்துறையினருடன் ஒத்துழைத்து நீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சல் பெறும் நோக்குடன் செயல்பட வேண்டுமேன கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி, திரு.பி.தர்மசெல்வன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், செயற்பொறியாளர் திரு.செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் திரு.கணேஷ், உதவி பொறியாளர் திருமதி.மோகனப்பிரியா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies