எனினும், கடந்த ஒரு வருடமாக அந்த குடிநீர் மையத்தின் சுத்திகரிப்பு எந்திரம் பழுதடைந்து பயன்பாடில்லாமல் உள்ளது. இதனால், தளவாய்அள்ளி, புதூர், கக்கன்ஞ்சிபுரம், ரெட்டியூர், மேஸ்திரிகொட்டாய், பி. கொல்லஹள்ளி, அண்ணாநகர் உள்ளிட்ட கிராம மக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் கடும் தவிப்பில் உள்ளனர்.
குடிநீர் குறைவால் மக்கள் கேன்வாட்டர் வாங்கி பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. கோடை காலம் தொடங்கிய நிலையில் கூடுதல் தண்ணீர் தேவைப்படும் என்பதால் கேன்வாட்டருக்கான செலவும் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கும், தனி அலுவலருக்கும் மனு அளித்தும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்காததால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் தொந்தரவு நீங்க பழுதான சுத்திகரிப்பு மையத்தை உடனடியாக சரிசெய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக