தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஒகேனக்கலில் பிளாஸ்டிக் நெகிழி பைகள் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.
பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுருளிநாதன், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சகிலா தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கிருஷ்ணன், சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் லாவண்யா, கூத்தப்பாடி பஞ்சாயத்து செயலாளர் குமரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், பஞ்சாயத்து ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றவர்கள் பதாகைகள் ஏந்தி, "பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்போம் – சுற்றுச்சூழலை காப்போம்" என்ற கோஷங்களை எழுப்பினர். பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முக்கிய முயற்சியாகப் பாராட்டப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக