Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளியில் அரசு மது கடை முன்பு டாஸ்மாக் ஊழலை கண்டித்து முதலமைச்சர் புகைப்படம் ஒட்டிய பாஜகவினர்.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி, அமானிமல்லாபுரம், பஞ்சப்பள்ளி ஆகிய  சில்லறை மதுபான விற்பனை கடைகளின் முன்பு    பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா தலைமையில்  தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின்  புகைப்படம் ஒட்டி முதல்வரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.


தமிழகம் முழுவதும் அரசு மதுக்கடைகளில்  1000கோடிக்கு ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும், இதற்கு காரணமான  திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் படம் உள்ளது அரசு மதுக்கடையில் ஏன் முதல்வர் படம் இல்லை என்றும், ஊழல் குறித்து தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளதை கண்டித்து கோஷம் எழுப்பி, அரசு மதுக்கடைகளின் முன்பு  போதையின் பாதையில் செல்லாதீர்கள் அப்பா என்ற வாசகத்துடன்   தமிழக முதல்வர் ஸ்டாலின்  புகைப்படத்தை மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் ஸ்ரீதேவி, சரண்யா ஆகியோர்  ஒட்டினர்.

 

இந்த நிகழ்ச்சியில்   பிஜேபி கட்சியின் பொறுப்பாளர்கள் சிவநாதன், கருணாகரன், அருள், சரவணன், முருகன், பார்த்தீபன், பெரியசாமிஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies