JCI தருமபுரி (Junior Chamber International) அமைப்பு, ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ விஜய வித்யாலயா கலை & அறிவியல் கல்லூரி இணைந்து உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணியை சிறப்பாக நடத்தினர்.
இந்த நிகழ்வு இன்று (பிப்ரவரி 4, 2025) தருமபுரி மருத்துவக் கல்லூரி முதல் நான்கு வழிச்சாலை வரை நடைபெற்றது. இந்த பேரணியை ஸ்ரீ மகாலக்ஷ்மி சில்க்ஸ் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ் பாபு கொடியசைத்து துவக்கிவைத்தார், இந்த பேரணியில் பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் என பலர் கலந்து கொண்டு புற்றுநோய் தடுப்பு மற்றும் அதன் விழிப்புணர்வு குறித்த முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இந்த நிகழ்விற்கு ஸ்ரீ மகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் ஸ்ரீ விஜய வித்யாலயா கல்லூரி நிர்வாகத்தினர், இந்த விழிப்புணர்வு நிகழ்வில் சிறப்பு ஆதரவு வழங்கியதோடு, மாணவர்களும் பணியாளர்களும் விழிப்புணர்வு பரப்புரையில் சிறப்பாக ஈடுபட்டனர். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க தொடர்ந்து இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிகழ்வில் தருமபுரி JCI அமைப்பின் சார்பில் அந்த அமைப்பின் தருமபுரி பிரிவு தலைவர் Jc.பாபு, முன்னாள் தலைவர்கள் Jc.ரவிக்குமார், Jc.விஜயகுமார், Jc. கணேஷ், Jc பிரசாந்த், Jc சிவகாமராஜ், Jc. யுவராணி, Jc. நிரோஷா, Jc. சுரேஷ், Jc. பிரசன்னா, Jc. ஸ்ரீனிவாசன், Jc சென்னைய்யன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக