பாப்பாரப்பட்டி அருகே போலீஸ் எனக் கூறி பணம் பறிக்கும் கும்பலால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

பாப்பாரப்பட்டி அருகே போலீஸ் எனக் கூறி பணம் பறிக்கும் கும்பலால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.


தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே ராமனுர் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் இவருக்கு ஒரு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர், இந்த நிலையில் இரண்டாவது  மகன் புகழேந்தி  ஒரு மனைவியும் மூன்று மாத கைக்குழந்தையும் உள்ளனர்.


இந்த நிலையில் கடந்த 2021 ஆண்டு புகழேந்தி தர்மபுரி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பென்னாகரம் பகுதி சேர்ந்த ஒரு பெண்ணை அழைத்துச் சென்று தங்கி உள்ளார், அந்த விடுதியில் இருந்த ரகசிய கேமராவில் இருவரின் நடவடிக்கைகளை பதிவு செய்து கொண்டு விடுதியில் பணியாற்றி வருபவர்கள் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர்.


அந்த இளைஞரும் அவர்களுக்கு மூன்று லட்ச ரூபாய் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது, மேலும் வீடியோ காட்டி மீண்டும் பணம் பறிக்க முயன்றுள்ளனர், இதனால் மணமுடைந்த புகழேந்தி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உறவினர்கள் புகழந்தை மீட்டு பென்னாகரம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உள்ளனர், டாக்டர்கள் பரிசோதனையில் அவர் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.


மேலும் பணம் பறிக்க முயன்ற கும்பலை கைது செய்யக்கோரி ஒகேனக்கல் செல்லும் சாலையில் அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர், தகவல் அளித்து வந்த பென்னாகரம் டிஎஸ்பி மகாலட்சுமி சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தல் பேரில் கலைந்து சென்றனர்.


இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad