Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்ததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம்!.


ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்ததால், வாலிபர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திடீர் திருப்பம், நண்பனே போலீஸ் என மிரட்டி பணம் பறித்த விவகாரம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் பகுதியை சேர்ந்த முனியப்பன் இவருடைய மகன் புகழேந்தி வயது 25 இவர் நேற்று தனது குடும்பத்துக்கு சொந்தமான அரிசி ஆலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் புகழந்தியின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து அரசு அரசு தலைமை மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது புகழேந்தி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


மேலும் புகழேந்தி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகழேந்தி வேறு பெண்ணுடன் லாட்ஜில் தங்கி இருந்ததாகவும் அதை விடுதி பணியாளர்கள் ரகசிய கேமரா மூலம் வீடியோ எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது மேலும் அந்த வீடியோவை காண்பித்து அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறினர்.


இதற்கிடையே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அதனை அறிந்து அவரும் புகழேந்தியை மிரட்டி பணம் பறித்ததாக தெரிவித்தனர்.அதற்காக வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து ரூ.12 லட்சம் பெற்றதாக தெரிவித்தார்.இந்த தகவல்களை உறவினர்களிடம் கூறிவிட்டு புகழேந்தி அன்று இரவே தற்கொலை செய்து கொண்டதாக புகழந்தியின் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.


இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் கூறியதாவது, தற்கொலை செய்து கொண்ட புகழ்ந்தியும் கௌரிசெட்டி பட்டியை சேர்ந்த மாதையன் மகன் சதீஷ் வயது 27 என்பவரும் நெருங்கிய நண்பர்கள் .இவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். வீட்டிற்கு தெரியாமல் புகழேந்தி தன்னுடைய நண்பர் சதீஷ் இடம் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து சுமார் 10 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். மேலும் புகழேந்திக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் புகழேந்தியின் மனைவி மாலதி பிரசவத்திற்காக தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.


வீட்டில் யாரும் இல்லாததால் மனைவியின் நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணத்தை பெற்று தனது நண்பர் சதீஷ் இடம் கொடுத்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர். இந்த விளையாட்டில் பணம் பறிபோனது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த புகழேந்திக்கு அவரது நண்பர் சதீஷ் வேறு விதமாக யோசனை கொடுத்துள்ளான். அந்த யோசனையின் அடிப்படையில் புகழேந்தி தனியார் லாட்ஜில் வேறொரு பெண்ணுடன் இருந்ததாகவும் அப்போது லார்ஜ் பணியாளர்கள் தங்களை வீடியோ எடுத்ததாகவும் .அதை காட்டி லாட்ஜ் பணியாளர்கள் மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறியுள்ளான்.


மேலும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அடிக்கடி தன்னை மிரட்டி பணம் பறித்ததாகவும் குடும்ப உறுப்பினர்களிடம் புகழேந்தி பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். மேலும் கடைசியாக மனைவியின் நகைகளை அடகு வைத்து புகழேந்தி தனது நண்பர் சதீஷ்க்கு 75 ஆயிரம் பணம் கொடுத்துள்ளான். மேலும் அதிகளவில் புகழேந்தி அடிக்கடி சதீஷிடம் பேசியுள்ளான். அதன் அடிப்படையில் போலீசார் சதீஷிடம் விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் பேசியதாக கூறப்படும் சிம்கார்டு என் சதீஷிடமே உள்ளது.


அந்த எண்ணினை சதீஷ் தனது முகவரியை கொடுத்து அந்த சிம்கார்டை பெற்றுள்ளான். மேலும் இவனிடம் ஐந்துக்கு மேற்பட்ட சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் படிப்புக்கு தகுந்த வேலைகளுக்கு செல்லாமல் விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தேவையில்லாமல் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டிலும் ஈடுபட்டு தங்களது பணத்தை தொலைப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தை நிம்மதியையும் உயிரையும் மாய்த்துக் கொள்வது தொடர்கதையாக உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies