Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பெரும்பாலை அருகே ஆலமரத்தூர் கிராமத்தில் ஓங்காளியம்மன் தீமிதி திருவிழா ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்‌.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த பெரும்பாலை அருகே  ஆலமரத்தூர்  சாணாரப்பட்டி, பூதநாயக்கன்பட்டி, சோளிகவுண்டனூர், ரோணிப்பட்டி உள்ளிட்ட ஐந்து கிராமத்திற்கு சேர்ந்த  பழமை வாய்ந்த சக்தி மிகுந்த ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயில் ஆலாமரத்தூரில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும்  தை மாத இறுதியில் இந்த  கோயிலில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் 15 நாட்கள் அம்மனை கொழுவில்  வைத்து   சிறப்பு பூஜை செய்து ஐந்து ஊர் பொதுமக்கள் ரோணிப்பட்டி  நாகாவதி ஆற்றங்கரையிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில்  சக்தி கரகம், பூ கரகம் அழைத்து பம்பை மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்தனர். 

பின்னர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த சுமார் 20 அடி நீளம் கொண்ட தீகுண்டத்தில் அலகு குத்தியும் ஏராளமான பெண்கள் மற்றும் பொதுமக்கள் குழந்தைகளுடன் தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்  .மேலும் கண் திருஷ்டி, பில்லி சூனியம் நீங்குவதற்கு தீ குண்டத்தில் உப்பு தெளித்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர்.


இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோயிலுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கூட்ட நெருச்சலை கட்டுப்படுத்த பெரும்பாலை போலீசார் பத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் விழா குழுவினர் சண்முகம்,  பத்மாவதி, விஜயலட்சுமி , லோகித், கோகுல் ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக  செய்திருந்தனர். மேலும் 5 ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு திருவிழாவை சிறப்பித்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies