Type Here to Get Search Results !

நாளை தருமபுரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 

எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.


இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.


ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 21.02.2025 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies