இவர்களது சேவைகளை பாராட்டும் விதமாக காங்கேயத்தில் நடைபெற்ற எண்ணங்களின் சங்கமம் 20ஆம் ஆண்டு விழாவில் திருவாடுதுறை ஆதினம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் மை தருமபுரி அமைப்பிற்கு சிறந்த சமுதாய சேவகர் எனும் விருது வழங்கி வாழ்த்தி அருளினார்.
இது குறித்து மை தருமபுரிஅமைப்பின் தலைவர் சதீஷ்குமார் ராஜா கூறுகையில், மை தருமபுரி அமைப்பின் சேவைகளை என்றென்றும் ஊக்குவித்து வரும் எண்ணங்களின் சங்கமம் தலைவர் மாமனிதர் பிரபாகரன், மை தருமபுரி அமைப்பின் கௌரவத் தலைவர் CKM ரமேஷ் ஆகியோருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். சிறந்த சமுதாய சேவகர் விருதை தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் அவர்கள் வழங்கினார் என கூறினார்.
இந்த நிகழ்வில் மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் அருணாசலம், கிருஷ்ணன், செந்தில், சண்முகம், அருள்மணி, மூர்த்தி, ஜெயசூர்யா, சையத் ஜாபர், குணசீலன், கணேஷ், கோகுல்ராஜ் ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டனர்.

