Type Here to Get Search Results !

பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்து போக்குவரத்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.


மாண்புமிகு வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ திரு.எம்‌.ஆர்‌.கே.பன்வீர்செல்வம்‌ அவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி.இஆ.ப. அவர்கள்‌ முன்னிலையில்‌ தருமபுரி புறநகர்‌ பேருந்து நிலையத்தில்‌ தட நீட்டிப்பு, மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களுக்கான பேருந்து சேவை மற்றும்‌ கிளைகளின்‌ ஓட்டுநர்‌, நடத்துணர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையை இன்று கொடியசைத்துத்‌ துவக்கி வைத்தார்கள்‌.


மாண்புமிகு    வேளாண்மை    மற்றும்‌    உழவர்‌    நலத்துறை    அமைச்சர்‌ திரு.எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி.இ.ஆப., அவர்கள்‌ முன்னிலையில்‌ தருமபுரி புறநகர்‌ பேருந்து நிலையத்தில்‌ தட நீட்டிப்பு, மாற்றியமைக்கப்பட்ட வழித்தடங்களுக்கான பேருந்து சேவை மற்றும்‌ கிளைகளின்‌ ஓட்டுநர்‌, நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையை இன்று (27.01.2025) கொடியசைத்துத்‌ துவக்கி வைத்தார்கள்‌.


பொம்மிடி, அரூர்‌ மற்றும்‌ பாலக்கோடு கிளைகளின்‌ ஓட்டுநர்‌, நடத்துனர்களுக்கான ஓய்வறையைப்‌ புதுப்பித்து, குளிரூட்டப்பட்ட ஓய்வு அறையாக மேம்படுத்தி பயன்பாட்டிற்காகத்‌ துவக்கிவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின்‌ நீண்ட நாள்‌ கோரிக்கை மற்றும்‌ பள்ளி, கல்ஜூரி மாணவ, மாணவியர்களுக்குப்‌ பேருந்து வசதி அளிப்பதற்காகத்‌ தடநீட்டிப்பு மற்றும்‌ தடமாற்றம்‌ செய்யப்பட்டுள்ளது.


மகளிர்‌ விடியல்‌ பயணம்‌ செய்யும்‌ வழித்தடம்‌ நீட்டிப்பு/மாறுதல்‌ செய்து இயக்க உள்ள வழித்தடங்கள்‌ அரூர்‌ முதல்‌ வெள்ளிங்கிரி செல்லும்‌ பேருந்தினை வகுத்தப்பட்டி வழியாக செல்லுமாறு வழித்தடம்‌ மாற்றியும்‌, தருமபுரி முதல்‌ இராமியம்பட்டி செல்லும்‌ பேருந்தினைத்‌ தென்கரைக்கோட்டை வரை நீட்டித்தும்‌, அரூர்‌ முதல்‌ பொம்மிடி செல்லும்‌ பேருந்தினை ஐம்மனஅள்ளி, தென்கரைக்‌கோட்டை, சுகர்மில்‌ வழியாக செல்லுமாறு மாற்றியும்‌, தருமபுரி முதல்‌ கெட்டுப்பட்டி செல்லும்‌ பேருந்தினை ஜீவாநகர்‌ ஊருக்குள்‌ சென்று வருமாறும்‌, தருமபுரி முதல்‌ தண்டுமாரியம்மன்‌ கோயில்‌ செல்லும்‌ பேருந்தினை ஏரிக்கரை, விஜயநகர்‌, வத்தல்மலை அடிவாரம்‌ வரை நீட்டித்தும்‌, தருமபுரி முதல்‌ எட்டிக்குழி செல்லும்‌ பேருந்தினைப்‌ பங்குநத்தம்‌ கூட்ரோடு உள்சென்று வருமாறும்‌ பேருந்து சேவையை இன்று கொடியசைத்துத்‌ துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


மேற்படி பேருந்து சேவை மூலம்‌ வகுத்தப்பட்டி, தென்கரைக்கோட்டை, ஜம்மனஅள்ளி, சுகர்மில்‌, ஜீவாநகர்‌, ஏரிக்கரை, விஜயநகர்‌, வத்தல்மலை அடிவாரம்‌, பங்குநத்தம்‌ உள்ளிட்ட 9 கிராமங்கள்‌ பேருந்து வசதி பெறுகிறது. இதன்‌ மூலம்‌ பள்ளி, கல்லூரி மாணவர்கள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ என சுமார்‌ 4,065 நபர்கள்‌ பயன்‌ பெறுகிறார்கள்‌. இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ திரு.எம்‌.ஆர்‌.கே.பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்கள்‌.


இந்நிகழ்ச்சியில்‌ தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்‌ திரு.ஆ.மணி, முன்னாள்‌ அமைச்சர்‌ முனைவர்‌.பி.பழனியப்பன்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ திரு.தடங்கம்‌.பெ.சுப்பிரமணி, திரு.ன்பசேகரன்‌, தருமபுரி நகரமன்ற தலைவர்‌ திருமதி. மா.லட்சுமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழக பொது மேலாளர்‌ திரு.க.செல்வம்‌, துணை மேலளர்கள்‌ உள்ளிட்ட அரசு அலுவலர்கள்‌ மற்றும்‌ தொழிற்சங்கப்‌ பிரதிநிதிகள்‌ கலந்து கொண்டனர்‌.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884