தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கரை அவமதித்து இழிவாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமிஷாவை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமிஷாவை இந்திய நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும் என பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.