Type Here to Get Search Results !

குமரி வள்ளுவன் சிலையின் 25ம் ஆண்டு நிறைவு விழா; வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு.


தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில்‌ அய்யண்‌ திருவள்ளுரின்‌ 133 அடி உயர திருவுருவச்சிலை முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ கன்னியாகுமரியில்‌: நிறுவப்பட்டு 25 ஆண்டுகள்‌ நிறைவடைந்த்தை முன்னிட்டு, வெள்ளி விழா - 2024 கொண்டாடப்பட்டு, நிறைவு விழா நிகழ்வில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப. அவர்கள்‌ இன்று கலந்து கொண்டு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில்‌ அய்யன்‌ திருவள்ளுவரின்‌ 133 அடி உயர திருவுருவச்சிலை முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ கன்னியாகுமரியில்‌ நிறுவப்பட்டு 25 ஆண்டுகள்‌ நிறைவடைந்த்தை முன்னிட்டு, வெள்ளி விழா - 2024 கொண்டாடப்பட்டு, நிறைவு விழா நிகழ்வில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப, அவர்கள்‌ இன்று (31.12.2024) கலந்து கொண்டு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ சான்றிதழ்களை வழங்கினார்கள்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ திருவள்ளுவரின்‌ 133 அடி உயர திருவுருவச்‌ சிலை முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களால்‌ கன்னியாகுமரியில்‌ நிறுவப்பட்டு 25 ஆண்டுகள்‌ நிறைவு பெற்ற நிலையில்‌ வெள்ளி விழா சிறப்பாக கொண்டாட அறிவுறுத்தியதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில்‌ டிசம்பர்‌ 23.42.2024 முதல்‌ தொடங்கி 31.42.2024 இன்று வரை திருவள்ளுவர்‌ புகைப்படம்‌ காட்சிப்படுத்தி திருக்குறளின்‌ பெருமைகளை உணர்த்தும்‌ நிகழ்ச்சி நடைபெற்றது.


அதனைத்‌ தொடர்ந்து, 24.12.2024 அன்று "உள்ளுவதெல்லாம்‌ உயர்வுள்ளல்‌" என்ற தலைப்பில்‌ கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்‌. 26.12.2024 அன்று திருக்குறள்‌ ஒப்புவித்தல்‌ போட்டி (1-ம்‌ வகுப்பு முதல்‌ 9-ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்கள்‌ கலந்து கொண்டனர்‌). 27.12.2024 அன்று வினாடி - வினா (9-ம்‌ வகுப்பு முதல்‌ 12-ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்கள்‌ கலந்து கொண்டனர்‌). 28.12.2024 அன்று "அன்பும்‌ அறனும்‌" என்ற தலைப்பில்‌ கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்‌. 2912.2024 அன்று "உழுதுண்டு வாழ்வாரே" என்ற தலைப்பில்‌ கல்லூரி மாணவர்களுக்கான கருத்தரங்கம்‌. 30.12.2024 அன்று "குமரியில்‌ அய்யன்‌ வள்ளுவர்‌ சிலையும்‌ குறளில்‌ அதிகாரவைப்பு முறையும்‌" என்ற தலைப்பில்‌: பேச்சுப்‌ போட்டி (8-ம்‌ வகுப்பு முதல்‌ 10-ம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்கள்‌ கலந்து கொண்டனர்‌). என பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்‌ பரிசு ரூ.5000/- இரண்டாம்‌ பரிசு ரூ.3000/- மற்றும்‌ மூன்றாம்‌ பரிசு ரூ.2000/- வீதம்‌ ரொக்க பரிசு மற்றும்‌ சான்றிதழ்களை இன்று நடைபெற்ற நிறைவு விழாவில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப. அவர்கள்‌ வழங்கினார்கள்‌.


இந்நிகழ்ச்சியில்‌ தருமபுரி தகடூர்‌ புத்தகப்‌ பேரவை செயலாளர்‌ மரு.இரா.செந்தில்‌, மாவட்ட நூலக அலுவலர்‌ திருமதி.அர.கோகிலவாணி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள்‌ மற்றும்‌ பள்ளி மாணவ, மாணவியர்கள்‌ கலந்து கொண்டனர்‌. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies