Type Here to Get Search Results !

தோட்டக்கலைத்துறையின் சார்பில் மரவள்ளி முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தோட்டக்கலைத்துறையின் சார்பில் மரவள்ளி முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தோட்டக்கலைத்துறையின் சார்பில் மரவள்ளி முத்தரப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.12.2024) நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:- மரவள்ளி கிழங்கிற்கான குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்தல் (MSP), விலை நிர்ணயக் குழுவில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளை சேர்த்தல், மரவள்ளி கிழங்கின் starch content (point) கண்டறிய Digital Starch meter தேவை, ஜவ்வரிசியினை நியாய விலைக் கடைகளில் விநியோகம் செய்தல், அதிக starch content, குறுகிய காலத்தில் மகசூல், பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் கொண்ட புதிய இரக மரவள்ளி பயிரினை அறிமுகப்படுத்துதல், மரவள்ளி மாவுப்பூச்சியினை கட்டுப்படுத்துவதற்கு ஒட்டுண்ணிகளை உரிய காலத்தில் உற்பத்தி செய்து வழங்குதல், சொட்டு நீர்ப் பாசன வழி வழங்கும் உரங்களின் விலையினை கட்டுப்படுத்த தற்போது வழங்கப்படும் இரசாயன இனத்திலிருந்து உரங்கள் இனத்திற்கு மாற்றம் செய்தல் போன்ற கோரிக்கைகள் விவசாயிகளால் பதிவு செய்யப்பட்டது. இக்கோரிக்கைகளை அரசிற்கு கருத்துருவாக அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


இக்கூட்டத்தில் மேலாண்மை இயக்குநர் - சேகோசர்வ், சேலம் திருமதி.கீர்த்திபிரியதர்ஷினி, தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி.அ.க.பாத்திமா, வேளாண்மை துணை இயக்குநர் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்) திருமதி.சித்ரா, பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் அறிவியல் நிலையம், பாப்பாரப்பட்டி திருமதி.வெண்ணிலா, வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திரு.இளங்கோவன், வேளாண் விற்பனைக் குழு செயலாளர் திரு.ரவி, தருமபுரி மாவட்ட ஆலை அதிபர்கள், திரு.S.A.சின்னசாமி, மாநில விவசாயிகள் சங்கத் தலைவர், விவசாயிகளான திரு.சுப்பிரமணி, திரு.திருமலை, திரு.முரளி, திரு.பிரதாபன், திரு.மாதையன், திரு.கோவிந்தராஜ் மற்றும் அனைத்து வட்டார முன்னோடி விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884