Type Here to Get Search Results !

முன்னாள் படை வீரர்களுக்கு ஆவின் நிறுவனத்தின் சூப்பர் சலுகை.


"ஆவின் பாலக முகவர்களாக" நியமன் பெற விருப்பம் உள்ள தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முப்படைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்.


முன்னாள் படைவீரர்களை ஆவின் பாலக முகவர்களாக நியமித்திட பொது மேலாளர் (விற்பனை), பொறுப்பு, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் விற்பனை பிரிவு, கூட்டாண்மை அலுவலகம், நந்தனம், சென்னை -35 அவர்களின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு என ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


"ஆவின் பாலக முகவர்" நியமனமானது ஆவின் நிறுவன இணையதளத்தில் (www.aavinmilk.com) (Vacant) பாலகம் பட்டியல் அவ்வப்போது வெளியிடப்பட்டு பாலக முகவர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். ஆவின் பாலக முகவர்களாக விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் பாலகத்திற்குண்டான விண்ணப்பப் படிவம் (www.aavinmilk.com) என்கிற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விற்பனைப்பிரிவு நந்தனம், தலைமை அலுவலகத்தில் விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


அல்லது, முன்னாள் படைவீரர்கள் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ கடை இருப்பின் சம்மந்தப்பட்ட வட்டார அலுவலகத்தை அணுகி ரூ.1000 முன்பணம் செலுத்தி FRO முகவர் உரிமம் பெற்று பாலகம் நடத்தலாம் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் உடன் விண்ணப்பித்து பயனடையலாம். இது குறித்து மேலும் விவரம் பெற 04342-297844 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies