Type Here to Get Search Results !

பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்.


பாலக்கோடு மேற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் மாரண்டஅள்ளி சபரி  மாஹல் மண்டபத்தில் அவைத்தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைச் செயலாளர்கள் சண்முகம், அண்ணாமலை, சரிதா குமார், பொருளாளர் துரை, மாவட்ட பிரதிநிதிகள் ஜெகநாதன், வெங்கடாஜலபதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய ஓன்றிய  செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன் அவர்கள் வருகின்ற நவம்பர்- 27ஆம் தேதி மாண்புமிகு துணை முதல்வரும் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கிளைக்கழங்கள் தோறும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும் அடுத்த மாதம் அரசு முறை பயணமாக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் மாண்புமிகு துணை முதல்வர் அவர்களுக்கு மேற்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இக்கூட்டத்தில் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அருள் பிரகாஷ், தொண்டரணி தலைவர் குமார், ஒன்றிய கவுன்சிலர் ராஜா ஊராட்சி மன்ற தலைவர் குட்டி (எ) வெங்கடேசன் அணிகளின் துணை அமைப்பாளர்கள் மணிவண்ணன், முகுந்தன், தர்மன், சிவகுமார், மரக்கடை சக்திவேல், கங்கா வழக்கறிஞர் குமரன், சூடப்பன், பஞ்சப்பள்ளி ஆயகட்டு தலைவர் நடராஜன் ஜ.டி.விங்க் சுரேஷ்குமார், இந்திரகுமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies