மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் குட்டி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளி நாதன், ஷகிலா, பற்றாளர் ரவி, ஒன்றிய மாற்றுத்திறனாளிகள் துறை ஒருங்கிணைப்பாளர் புனிதமணி, ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் வசந்தி ரத்தினவேல், கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் விஜயா, உதவி வேளாண் அலுவலர் கோகிலா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது, ஜல்ஜீவன் இயக்கம் மூலம் அனைத்து வீடுகள் மற்றும் பள்ளிக் கட்டடம் கள் ஆகியவற்றுக்கு குடிநீர் விநியோகத்தை உறுதிப் படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதேபோல் பாலக்கோடு ஒன்றியத்தில் பூகானஹள்ளி. செக்கோடி ஆகிய ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது இதில் பூகானஹள்ளி ஊராட்சி மன்றத் தலைவர்கள் முருகன் தலைமையிலும். செக்கோடியில் சரஸ்வதி ஏமக்கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷ் கிராம நிர்வாக அலுவலர் ஜீவா, ஊராட்சி செயலாளர் பச்சையப்பன்.சிவா. வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
