வடகிழக்கு பருவமழை தீவிரத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது, இதன் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காடு மலை பகுதியில் பெய்து வரும் மழையினால் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அமைந்துள்ள வாணியாற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் அரூர் கோட்டாட்சியர் அவர்கள் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் வாணியாறு நீர்த்தேக்க தேக்கத்தில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளதாக பொதுப்பணி நீர்வள ஆதாரத் துறையின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே திறந்து விடப்படும் இந்த தண்ணீர் பயணம் செய்யும் வழியில் உள்ள கிராமங்களில் பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என அரூர் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக