தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 நவம்பர், 2024

தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது.


தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் தலைவர் லட்சுமி நாட்டார் மாவட்ட தலைமையில் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையர் சேகர் முன்னில வைத்தனர், இதில் நகர்மன்ற துணைத் தலைவர் நித்யா அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள் முன்னா, நாகராஜன், அலமேலு சக்திவேல், சத்யா, கார்த்திக், உண்மையாம்பிகை, நாகேந்திரன், செல்வி திருப்பதி, ராஜாத்தி பூக்கடை ரவி, மாதேஸ்வரன், புவனேஸ்வரி, சின்னபாப்பா, பாலசுப்பிரமணியன், வாசுதேவன், பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இதில் நகர மன்ற துணைத் தலைவர் நித்யா அன்பழகன் பேசும்போது, தங்களின் பகுதியில் வரி வசூலிப்பு பில் மேல் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது என்று புகார் தெரிவித்தார். அதிமுக நகர்மன்ற உறுப்பினர் நாகராஜ் தங்கள் பகுதியில் சிவாஜி பேன்சி விநாயகர் கோயில் பகுதியில் நகராட்சி சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்துள்ளனர் அதை அகற்ற வேண்டும் என்று நகர மன்ற தலைவருக்கு தெரிவித்தார். 


30வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ராஜாத்தி பூக்கடை ரவி தங்கள் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து உள்ளது அதை சரி செய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர். அப்பகுதி பொதுமக்கள் தினந்தோறும் தண்ணீரில் இல்லாமல் சண்டை போடுகின்றனர் எனவே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் உடைந்த பைப்பை சரி செய்ய வேண்டும் என்று நகர மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தார், இந்த கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad