கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தளிகொத்தனூர் கிராமம் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்துள்ளார். இவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரித்ததில் உறவினர்கள் யாரும் இல்லை என்று தெரியவந்தது. சமீபத்தில் சிகிச்சை பலனின்றி இறந்த அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து நல்லடக்கம் செய்ய மை தருமபுரி தன்னார்வலர்கள் மூலமாக தேன்கனிக்கோட்டை காவல் நிலைய காவலர் உதயக்குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், மருத்துவர் முஹம்மத் ஜாபர், செந்தில், அருண் பிரசாத், ஜெய்சூர்யா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர்.
மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 100 ஆண்கள், பெண்கள், பச்சிளம் குழந்தைகள், ஏழ்மையில் இறந்தோர் என மொத்தம் 120 ஆதரவன்றி இறந்த புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக