Type Here to Get Search Results !

காட்டுக்கொட்டாய் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் பி.செட்டி அள்ளி  ஊராட்சியில் உள்ள காட்டுக் கொட்டாய் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துசாமி, லதா ராஜாமணி, அழகு சிங்கம் ஆகியோர் முன்னிலையில்  நடைப்பெற்றது.


காட்டுக் கொட்டாய் கிராமத்தில் 200 மேற்பட்ட  குடும்பங்களை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க நபார்டு திட்டத்தின் மூலம்  16 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


அதனை தொடர்ந்து திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன்  தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்க்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நாகராஜ், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன், ஊர் கவுண்டர் மணிகண்டன், மந்திரி கவுண்டர் பெருமாள், வார்டு உறுப்பினர் பூபதி, ஒன்றிய துணை செயலாளர் செந்தில், கிளை செயலாளர் மாணிக்கம், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884