Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதை தடுத்திட பொதுமக்கள் சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கலாம்.


தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் திருமணத்தினை தடுத்திட பல்வேறு நடடிவக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், காவல்துறை, கல்வித்துறை,  ஊரக வளர்ச்சி துறை மருத்துவத் துறைகளுடன் இணைந்து குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுத்தல்,  வளரிளம் பருவ கர்ப்பம்பள்ளி செல்லா குழந்தைகள், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல்  போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுவருகிறது.

கிராம அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு, ஒன்றிய அளவில் வட்டார குழந்தைகள் பாதுகாப்புக்குழு, பேரூராட்சிகள் அளவிலான குழந்தைகள் பாதுகாப்புகு குழு, நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு குழந்தை திருமணம் தடுத்தல்குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


மாதந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் நேர்காணல் முகாம், ஊங்களை தேடி உங்கள் ஊரில் முகாம், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்த்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு குழந்தை திருமணம் தடுத்தல் குறித்த விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்கள் அனைத்துதுறை அலுவலர்கள், ஆசிரியர்கள்,  களப்பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கிராம சுகதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பெண் குழந்தைககளின் பாதுகாப்பு, குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் வன்கொடுமை தடுத்தல், பாலினம் கண்டறிதல் தடுத்தல் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட பல கூட்டங்கள் வாயிலாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும்  15.08.2024 அன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற்றதை முன்னிட்டு கடந்த மூன்றாண்டுகளில் 466 குழந்தை திருமணங்கள் குறித்ததகவல் வரப்பெற்று  356 திருமணங்கள்தடுத்து நிறுத்தப்பட்டு குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆற்றுப்படுத்துதல்  வழங்கப்பட்டுகல்வியினை தொடரநடடிவக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  குழந்தை திருமணம் நடைபெற்றதாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் நடைபெறுவதாக தகவல் தெரிந்தால் சைல்டு ஹெல்ப்லைன் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்திட தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884