தருமபுரியில் பல்வேறு சமூக பணிகளை செய்து வரும் மை தருமபுரி தன்னார்வலர் அமைப்பு இந்த தீபாவளியை ஆதரவற்றவர்களுடன் கொண்டாட உள்ளனர், இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் சதிஷ் குருகையில், மை தருமபுரி அமைப்பின் சார்பாக தித்திக்கும் தீபாவளி திருநாளை கொண்டாடும் விதமாக ஏழை மக்கள், பெற்றோர் இல்லாத குழந்தைகள், மனநல காப்பகங்கள், முதியோர் இல்லங்கள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் பட்டாசுகள் வழங்கி சிறப்பிக்கும் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பூதனள்ளி கிராமத்தில் 20 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கினோம், அதைத் தொடர்ந்து தருமபுரி நகரப் பகுதியில் ஏழ்மையில் உள்ளோர், வாய் பேச முடியாத நண்பரின் குடும்பத்திற்கு என 15 குடும்பத்திற்கு இன்று மளிகை பொருட்கள், இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு மை தருமபுரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் முகமது ஜாபர் அவர்கள் பொருட்களை கொண்டு சென்று தேவையான குடும்பங்களுக்கு வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார், என சதீஸ் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக