தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2 ஆதிதிராவிடர் மற்றும் ஒரு பழங்குடியினர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு தலா ரூ.1.65 இலட்சம் மானிய நிதி உதவி வீதம் ரூ.4.95 இலட்சம் மதிப்பில் நிதியுதவி பெறும் வகையில் பால் வளத்துறையால் பதிவு செய்யப்பட்டு, பதிவு சான்றிதழை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (30.10.2024) வழங்கினார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மகளிர் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் 2023-2024 ஆம் ஆண்டு சட்டசபை மானிய கோரிக்கையில் மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க, தருமபுரி மாவட்டத்தில் த.பி.டி.1223 மாரப்பநாயக்கன்பட்டி மகளிர் பாலுற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், த.பி.டி.1224 பெ.தாதம்பட்டி மகளிர் பாலுற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகிய 2 ஆதிதிராவிடர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் த.பி.டி.1222.எலந்தகொட்டப்பட்டி மகளிர் பாலுற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆகிய ஒரு பழங்குடியினர் மகளிர் பாலுற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என மொத்தம் 3 கூட்டுறவு சங்கங்களுக்கு தலா. ரூ.1.65 இலட்சம் மானிய நிதி உதவி வீதம் ரூ4.95 இலட்சம் மதிப்பில் நிதியுதவி பெறும் வகையில் பால்வளத்துறையால் பதிவு செய்யப்பட்டு, பதிவு சான்றிதழ் இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும், தி.பி.டி 49 இலளிகம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கமானது கடந்த தணிக்கையாண்டு 2023 - 2024 இல் 231523.30 லிட்டர் பாலை கொள்முதல் செய்து ரூ.79.06 இலட்சம் மதிப்பில் வணிகம் செய்ததில் ரூ.4.29 இலட்சம் நிகர இலாபமாக ஈட்டியுள்ளது. தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு, தணிக்கை ஆண்டில் பால் வழங்கியுள்ள மொத்தம் 55 உறுப்பினர்களுக்கு ரூ. 100 க்கு ரூ.2.90 பைசா என்ற விகித்தில் ஈட்டிய நிகர இலாபத்தில் ரூ.2.15 இலட்சம் இலாப பிரிவினை செய்து உறுப்பினர்களுக்கு போனஸாக வழங்க பட்டியல் தயார் செய்யப்பட்டு, இதில் வருடம் முழுவதும் தொடர்ந்து அதிக பால் உற்பத்தி செய்து சங்கத்திற்கு வழங்கிய 3 சிறந்த உறுப்பினர்களுக்கு போனஸ் ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து உறுப்பினர்களின் வங்கி கணக்கில் போனஸ் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளர் திருமதி.மாலதி, சங்க உறுப்பினர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக