தருமபுரி மாவட்ட குற்றவழக்குத் தொடர்பவுத் துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞருக்கென ஒப்பளிக்கப்பட்டு காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05-11-2024 மாலை 05.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரம்:
- பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
- பணியின் தன்மை: அரசு விதிகளின்படி தருமபுரி மாவட்டம், குற்றவழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அவர்களுக்கு அடிப்படை பணிகளை மேற்கொள்வதில் உதவி செய்தல், அலுவலக நடைமுறைப் பணிகளில் உதவிடுதல்.
- ஊதியம்: ரூ.15700-58100 (நிலை 1) என்ற ஊதிய விகிதத்தில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன்.
- குறைந்தபட்ச வயது: 01.07.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்ச வயது வரம்பு (01.07.2024 அன்றுள்ளவாறு):
- பொதுப் பிரிவு (GT): 32 வயது
- பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர் (BC, BCM, MBC & D): 34 வயது
- ஆதிதிராவிடர் (SC), பழங்குடியினர் (ST) மற்றும் ஆதரவற்ற விதவை பிரிவில் அனைத்து வகுப்பினர் (DW-All Categories): 37 வயது
- காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை: 1 (GT-Priority)
தகுதி:
- எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
- தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உதவி இயக்குநர் அலுவலகம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை, ஆயுதப்படை காவலர் பயிற்சி வளாகம், வெண்ணம்பட்டி ரோடு, தர்மபுரி மாவட்டம் - 636 705 என்ற முகவரிக்கு 05-11-2024 மாலை 05.45 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
குறிப்பு:
- பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
- மேற்கண்ட நியமனத்திற்கான நேர்காணலை ஒத்திவைக்கவோ, நியமன அறிக்கையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இரத்து செய்யவோ, தர்மபுரி மாவட்டம், குற்ற வழக்குத் தொடர்வுத் துறை உதவி இயக்குநருக்கு முழு அதிகாரம் உள்ளது.
- மேலும், தேவைப்படின் மேற்படி பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
- விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட குற்றவழக்குத் தொடர்புத் துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக