Type Here to Get Search Results !

கணபதி கிராமத்தில் அதிமுக வடக்கு ஒன்றிம் சார்பில் உறுப்பிணர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கனபதி கிராமத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம்  சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 7ம் தேதி திங்கட்கிழமை  இன்று மதியம் 3  மணிக்கு   முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.  அவர்களின்  தலைமையில் நடந்தது, நிகழ்ச்சிக்கு கழக அவை தலைவர்  தொ.மு. நாகராசன்,  வடக்கு ஒன்றிய செயலாளர்  செந்தில், தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால்,   நகர செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கனபதி ஊராட்சியில் உள்ள அதிமுக உறுப்பிணர்களுக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ.அடையாள  அட்டையை  வழங்கி பேசும் போது அதிமுக ஆட்சியில் அடிதட்டு மக்களின் தேவைகளை அறிந்து குக்கிராமம் வரை சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொதுமக்களின் தேவைகளை அறிந்து செயல்படும் ஓரே கட்சி அதிமுக என பேசியவர் தற்போது நடைபெறும் திமுக அரசானது மக்கள் நல திட்டங்கள் பற்றி சிந்திப்பதில்லை எனவும், பழுதான தார்சாலையை கூட சீரமைக்காத நிலைதான் உள்ளதாகவும் வரும் உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற  தேர்தல்களிலும் அதிமுக பெருவாரியான வெற்றி பெற்று மீண்டும் அம்மா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் கழக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவார் என பேசினார்.


இந்நிகழ்ச்சியில்  மாணவர் அணி செயலாளர் ரவிசங்கர், முன்னாள்  கூட்டுறவு வங்கி தலைவர் பொன்னுவேல், ஒன்றிய பால்வளத் தலைவர் ஜிம். முருகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பாரதி, மாவட்ட கவுன்சிலர் சரவணன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் புதூர் சுப்பிரமணி, பாலக்கோடு வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா, கிளை நிர்வாகிகள்  தேவன், சண்முகம், கோவிந்தன், சண்முகராஜன், முருகன், ரகுபதி, நடராஜ், தங்கவேல், ஈஸ்வரன், கௌரப்பன், ஆறுமுகம், எந்தியன் உள்ளிட்ட அனைத்து கிளை செயலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies