தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரும் வரவேற்று தமிழாசிரியர் முனியப்பன் பேசினார். முன்னிலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா வகித்தார். பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சரவணன் இவ்விழாவினை ஒருங்கிணைத்து தலைமை தாங்கினார்.
பென்னாகரம் சட்டமன்றத் உறுப்பினர் G K மணி, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஆசிரியர் தின விழா வாழ்த்து தெரிவித்து சிறப்புரை ஆற்றினார். அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு பரிசினை வழங்கினார்
இவ்விழாவில் விழாவில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஷ், பள்ளியின் முருகன்,ராஜேஸ்வரி, சரவணன் அகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர், இறுதியில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக