இராமகொண்டஅள்ளி அரசு பள்ளியில் பனை விதைகள் சேகரிக்கும் பணி தீவிரம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 5 செப்டம்பர், 2024

இராமகொண்டஅள்ளி அரசு பள்ளியில் பனை விதைகள் சேகரிக்கும் பணி தீவிரம்.


தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும்பனி வருகிற 8 தேதி தொடங்குகிறது.


தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும் இளைஞர்களிடம் பனை மரத்தின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை வரும் 8தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது. 


செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகம் முழுக்க பனை விதைகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏரியூர் ஒன்றியம் இராம கொண்டஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கொண்டு வந்த பனை விதைகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். 


இதுகுறித்து சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி கூறியது மாணவர்கள் மற்றும் தன் ஆர்வலர்கள் இடமிருந்து சுமார் 500 விதைகளை பெற்று நாகமரை, குருக் கலையனூர், கொண்டயனூர், சாம்பள்ளி காடு, செல்லமுடி , புளியமரத்தூர் , பூச்சூர்,வத்தல்பட்டி வரை உள்ள காவிரி கரையில் சூழல் மன்ற மாணவர்கள் துணையுடன் பனை விதைகள் நடப்படும் என கூறினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad