மொரப்பூர் ஒன்றியம் க ஈச்சம்பாடி காலனி தொடக்கப்பள்ளியில் இன்று வியாழக்கிழமை ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தலைமை ஆசிரியர் சீர் விஜயன் (பொ) தலைமை தாங்கினார் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் ஆசிரியர்கள் சார்பாக மாணவர்களுக்கு ஸ்போர்ட்ஸ் டிரஸ் (வண்ணத்துணிகள்) வழங்கப்பட்டது மேலும் பல்வேறு பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கூடுதல் சிறப்பாக மாணவர்களே ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக பல்வேறு பரிசு பொருட்களும் ஆசிரியர்களுக்கு வழங்கி கேட் வெட்டி கொண்டாடினர். வண்ணத்துணிகளுக்கான முழு தொகையையும் முன்னாள் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா பூங்கொடி அவர்கள் வழங்கி சிறப்பு சேர்த்தார்.
இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சீர் விஜயன் தற்காலிக ஆசிரியர் வ கயல்விழி பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரா மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகிய கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக