தருமபுரி அரசு கலை கல்லூரி கலை அரங்கில் புதிய மின்னனு குடும்ப அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தழிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு தகுதியுள்ள 1454 புதிய மின்னனு குடும்ப அட்டைகள் வழங்கியும், மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் மனுகள் அளித்த பொது மக்களுக்கு வேளாண்மை பொறியியல் துறை, மாற்று திரனாளிகள் நலத்துறை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டம் உள்ளிட்ட துறைகள் மூலம் 100 பயனாளிகளுக்கு 1 கோடியே 19 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
தருமபுரி மாவட்டத்தில் கடந்த 01.06.23 முதல் 30.06.24 வரை புதிய மின்னனு குடும்ப அட்டைகள் வேண்டி 5166 மனுதார்களில் முதற்கட்டமாக விசாரணை மேற்கொண்டு தகுதியுள்ள 1454 புதிய மின்னனு குடும்ப அட்டைகள் இன்று வழங்கபட்டது. மேலும் தமிழக அரசு பொறுப்பேற்ற பின்பு பொது மக்கள் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை அளித்து வந்த நிலையில் தற்போது மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் நகர பகுதிகள் மட்டுமல்லாது ஊராக பகுதிகளிலும் அதிகாரிகள் மக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்று வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 70 முகாம்கள் நடைபெற்று மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு தருமபுரி மாவட்டத்தில் எந்த வித பட்டாவோ, புதிய குடும்ப அட்டைகளோ வழங்கா நிலையில் தமிழக அரசு பொருப்பேற்ற 3 ஆண்டுகளில் தருமபுரி மாவட்டத்திற்கு மட்டும் 13 ஆயிரம் இலவச வீட்டு மனை பட்டாகள் வழங்கி தமிழக முதல்வர் சாதனை படைத்துள்ளார் என பெருமிதத்துடன் அமைச்சர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி, மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்ஸ்லி ராஜ்குமார, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக