Type Here to Get Search Results !

சிறந்த காவல் நிலையமாக அரூர் தேர்வு.


தர்மபுரி மாவட்டத்தில் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட அரூர் காவல் நிலையத்தில் மதுவிலக்கு  பிரிவின் ஐஐி மயில்வாகனன் ஆய்வு மேற்கொண்டார் அரூர் காவல் நிலையத்துக்கு மதுவிலக்கு பிரிவு ஐ.ஜி.மயில்வாகனன் வருகை தந்தார் பின்னர் அவர் காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகளை ஆய்வு செய்தார்.


காவல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டுறிந்தார் கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் விவரம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் தண்டனை பெற்றுக் கொடுத்த வழக்குகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தார் பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று  நட்டுவைத்தார்.


இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன்  காவல் ஆய்வாளர் செந்தில்ராஜ்மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies