Type Here to Get Search Results !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த சீத்தாராம் யெச்சூரி-க்கு அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினர்.


கம்பைநல்லூர் பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை சார்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி அவர்களுக்கு செவ்வஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர். அ.மாதேஸ்வரன் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் பெ.அழகுதுரை, சே. ஹானஸ்ட் ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக சார்பில் பேரூராட்சி மன்ற தலைவர் வடமலை முருகன், மொரப்பூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மா. ரத்தினவேல், கவுன்சிலர் ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப அணையின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் ராபர்ட் சொக்கன், அ. ராஜா, குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆ.மாது, த. மா. க. நகரத் தலைவர் லட்சுமி நாராயணன், பா. ம. க. ஒன்றிய துணை சேர்மன் பெருமாள், அ. தி. மு. க. நகர செயலாளர் கே.கே.தனபால், தீனா பாபு, மகேஷ், ஜெய் பீம் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் அறக்கட்டளை மேலாண்மை அறங்காவலர் கி.கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பே அருண்மதி, மனோகரன், சேட்டு, சுஜன், சாலை போக்குவரத்து சங்க நிர்வாகிகள் சி ஐ டி யு, சங்கர், பசுபதி, ராமு, சசிகுமார், ஆகியோர் கலந்து கொண்டு தோழருக்கு செவ்வாஞ்சலி செலுத்திய அவருடைய வரலாறை நினைவு கூர்ந்து பேசினார்கள். மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies