Type Here to Get Search Results !

மாரண்டஅள்ளியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நடைபெறும் தூய்மை பணியினை பேரூராட்சி தலைவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

 

மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புனர்வு சைக்கிள் பேரணியை பேரூராட்சி தலைவர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதம் 24 முதல் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வரை பேரூராட்சிக்குட்பட்ட பள்ளி, பேருந்து நிலையம், பொதுமக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட  பொது இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


இதன் தொடர்ச்சியாக மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களை கொண்டு சைக்கிள் பேரணியை   பேரூராட்சி மன்ற தலைவர் எம்.ஏ.வெங்கடேசன், கொடி அசைத்து துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்ட கல்வி அலுவலர் பரமசிவம் இளநிலை உதவியாளர் சம்பத், பள்ளிதலைமை ஆசிரியர் செல்வம் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.


பள்ளியில் இருந்து  தொடங்கிய பேரணியானது  நான்கு ரோடு, பேருந்து நிலையம், கடைத்தெரு, உள்ளிட்ட முக்கிய பகுதிகளின்  வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. முன்னதாக என் நகரம் அதனை நான் தூய்மையாக வைத்துக் கொள்வேன் என அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில்  உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், முதுகலை ஆசிரியர் மணிவண்ணன், காவல் துறையினர்,  பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள்கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies