மாநில அளவில் 2ஆம் இடத்தில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 அக்டோபர், 2024

மாநில அளவில் 2ஆம் இடத்தில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை.


உடல் உறுப்புதான அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு மாநிலத்திலேயே இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகளை பெற்றமைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு. அமுதவல்லி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

உடல் உறுப்புதான அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு மாநிலத்திலேயே இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் விருதுகளை பெற்றமைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மரு. அமுதவல்லி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்களை இன்று (30.09.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.


அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த மூன்று வருடங்களாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மூளைச்சாவு அடைந்த நபர்களுக்கு அவரின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் உறுப்புதான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கடந்த வருடம் மட்டும் 12க்கும் மேற்பட்ட உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு மாநிலத்திலேயே சென்னை ராஜிவ்காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக இரண்டாவது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.


தமிழக அரசின் சார்பில் கடந்த 23.09.2024 அன்று நடந்த உடல் உறுப்புதான தின விழாவில் நான்கு விதமான விருதுகளை அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கி மாநில மாண்புமிகு சுகாதாரதுறை அமைச்சர் வாழ்த்தினார். 

விருதுகளின் விவரம்

  1. மாநிலத்திலேயே அதிக அளவில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை செய்த 2வது மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கான விருது.
  2. மாநிலத்திலேயே உடல் உறுப்பு அறுவை சிகிச்சை சிறப்பாக மேற்கொண்டமைக்கான சிறந்த மருத்துவமனைக்கான விருது.
  3. உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்த மருத்துவருக்கான விருது.
  4. மாநிலத்திலேயே சிறந்த முறையில் உடல் உறுப்புதான அறுவை சிகிச்சை ஒருங்கிணைக்க உதவிய சிறப்பு ஒருங்கிணைப்பாளருக்கான விருது.


மேலும் இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மரு.சிவகுமார், உள்ளுரை மருத்துவர் மரு.நாகவேந்தன், மயக்கவியல் துறை தலைவர் மரு.முருகேசன், செவிலிய கண்காணிப்பாளர் மரு.அம்பிகா, மற்றும் மருத்துவர்கள், மருந்தாளுனர் திரு.ரமேஷ், செவிலியர் திருமதி.சுதா, மயக்கவியல் துறை பட்டமேற்படிப்பு மருத்துவர் மரு.பிரவீன்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad