தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய தீவிர பிரச்சாரத்தின் ஒருபகுதியாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் இன்று (30.08.2024) கொடியசைத்து, தொடங்கிவைத்தார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் வழிகாட்டுதலின்படியும் அனைத்து மாவட்டங்களிலும் 12.08.2024 முதல் 12.10.2024 வரை எச்.ஐ.வி./ எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வுயானது பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சாரம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ/மாணவிகளின் மனித சங்கிலி, ஆட்டோ ரிக்ஷாவில் விழிப்புணர்வு வாசகங்கள் ஒட்டுதல், எச்.ஐ.வி./எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கிராமிய கலைக்குழு மூலம் (Folk media Campaign) கிராமிய கலை நிகழ்ச்சிகள், கல்லூரி மாணவ, மாணவியர்களைக் கொண்டு Flash Mobs நிகழ்ச்சி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் சுமார் 350 நபர்கள் கலந்துகொண்டனர். மேலும், தருமபுரி மாவட்டத்தில் செஞ்சுருள் சங்கம் செயல்பட்டு வரும் பள்ளிகளில் 8-வது, 9வது மற்றும் 10-வது பயிலும் பள்ளி மாண/மாணவியர்களுக்கு (Poster Making Competition) நடத்தப்பட உள்ளது. இப்போட்டியானது 10 பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 மாணவ/மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. கிராமிய கலைக்குழு மூலம் (Folk media Campaign) எச்.ஐ.வி./எய்ட்ஸ், பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வுயானது கரகாட்டம், ஓயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் நாடகத்தின் மூலம் பாரதிக் கலைக்குழு மற்றும் சீனிவாச கலைக்குழுக்களின் மூலம் மாவட்டம் முழுவதும் 40 கிராமங்களில் தீவிர பிரச்சாரம் ஏற்படுத்தப்பட உள்ளது. செஞ்சுருள் சங்க கல்லூரிகளில் எச்.ஐ.வி./எய்ட்ஸ், பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வாரச்சந்தைகள், காய்கறி சந்தைகள், பேருந்து நிலையங்கள், சுயஉதவிக்குழுக்கள், கிராம சபா கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் 12.08.2024 முதல் 12.10.2024 வரை விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர்கள் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு எச்.ஐ.வி./எய்ட்ஸ், பால்வினை நோய் பற்றிய புரிந்துணர்தல் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு எச்.ஐ.வி./எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், NHM ஒருங்கிணைப்பாளர் மரு. ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் மரு.சிவக்குமார், துணை இயக்குநர் (காசநோய்) மரு.பாலசுப்பிரமணியம், DSP (Training) திருமதி.ராமலி ராமகிருஷ்ணன், உதவி திட்ட அலுவலர் திருமதி. செல்வி, மாவட்ட திட்ட மேலாளர் திரு.சி.அருள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் திரு.கா.உலகநாதன், ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, துறை சார்ந்த அலுவலர்கள், தொண்டு நிறுவனங்கள், நலமையங்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.