பீகார் மாநிலம் சாரை கிராமப் பகுதியை சேர்ந்த வித்யா நத் ராம், 65 வயது மதிக்கத்தக்க முதியவர் பீகாரிலிருந்து திருப்பூருக்கு கூலி தொழிலுக்காக ரயிலில் வந்து கொண்டிருந்தபோது புட்டிரெட்டிபட்டி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இவருடன் வந்து உறவினர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்துள்ளனர். மொரப்பூர் இருப்புப் பாதை காவலர் தேவராஜ், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தி ரோட்டரி மின் தகன மையத்தில் எரியூட்டினர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 106 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.