அப்போது அவர் அரூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் மாணவர்கள்,இளைஞர்கள் போதைப்பொருட்களுக்கு ஆட்படவேண்டிய நிலை உள்ளது. இதனை தடுக்க காவல்துறையின் நடவடிக்கை கடுமையாக்கப் படவேண்டும், விழிப்புணர்வு அதிகப்படுத்த வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் இதுகுறித்த தகவல்களில் போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி உடனடி தடுப்பு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.
அரூரில் புதியதாக சீரமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையத்திற்கு டாக்டர் அம்பேத்காரின் பெயர் சூட்டவேண்டும்,தமிழகத்தில் மக்களுக்கு பயனளிக்கும் அனைத்துத் திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும், அதற்கு மத்திய அரசு தங்களது பங்களிப்பை வழங்கிடவேண்டும். உடனடியாக தமிழக அரசுக்கு வரவேண்டிய நிலுவை தொகை மத்திய அரசு வழங்கிடவேண்டும். தருமபுரி மாவட்டத்தில் சாதீய கொடுமைகள் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். வரும் காலத்திலும், பாமக,பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக இருக்காது என்றார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா,முன்னாள் மாவட்ட செயலாளர் ஜானகிராமன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

