Type Here to Get Search Results !

தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு.


தருமபுரி நகராட்சிக்குட்பட்ட நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி. இ.ஆ.ப அவர்கள் இன்று (24.08.2024) பார்வையிட்டார்கள். அறிவுசார் மையத்தில் 200க்கும் மேற்பட்டோர் தினசரி வந்து பல்வேறு போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். 

மேலும் NEET தேர்வுக்கும், JEE போன்ற தேர்வுகளுக்கும் பயன்படும் வகையில் 100க்கும் மேற்பட் பல்வேறு புத்ததகங்களும் உள்ளன. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேசை நாற்காலிகள், அறைகளில் சுய முன்னேற்ற போஸ்டர் ஒட்டவும் மற்றும் சுத்திகரிக்கபட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அறிவுரைவழங்கினார்கள். 


மேலும் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தற்பொழுது பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போட்டித் தேர்வுகளுக்கு மாலை நேரத்தில் மற்றும் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகளை நடத்த ஆர்வமுள்ளவர்கள் நகராட்சி நிர்வாகத்தை அணுகலாம் எனதெரிவித்தார்கள்.


மேலும் தருமபுரி நகராட்சி சார்பாக அழகாபுரியில் உள்ளநகர்ப்புறவீடு அற்றவர்களுக்கான தங்குமிடத்தினை பார்வையிட்டு, அவர்களுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இதனைத்தொடர்ந்து ஒட்டப்பட்டியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் 400க்கும் மேற்பட்ட விடுதி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் இணைப்பினை வழங்கி மாணவர்களின் பயன்பாட்டிற்கு நீர் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார்


இந்த ஆய்வின்போது நகராட்சி பொறியாளர் திருமதி.புவனேஸ்வரி, நகர் நல அலுவலர் மரு தாமரைக்கண்ணன் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட உதவி பொறியாளர்கள் திருமதி.புவனேஸ்வரி, திரு.நவீன்குமார் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies