தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த மாம்பட்டி முல்லை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அகில இந்திய அளவிலான ஆயுதக் கோர்வை மற்றும் கம்பு சண்டையில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். அகில இந்திய அளவிலான ஆயுத கோர்வை மற்றும் கம்பு சண்டை போட்டிகள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
இப்போட்டியில் முல்லை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் மருதநாயகம் ஆயுதக் கோர்வை போட்டியில் தங்கப்பதக்கமும், கம்பு சண்டையில் வெண்கல பதக்கமும், தர்ஷன் ஆயுத கோர்வை போட்டியில் தங்கப்பதக்கமும், கம்பு சண்டையில் வெண்கல பதக்கமும், இரட்டை வாழ் வீச்சில் மற்றும் கம்பு சண்டையில் அபிநயா வெண்கல பதக்கங்களையும், கோவையில் நடைபெற்ற சிலம்பம் சப்ஜுனியர் பிரிவில் கோவிந்தராமன் இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பதோடு உலக அளவில் போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர் போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் வினோநாத், முதல்வர் உத்தேஷ், சிலம்பு பயிற்சியாளர் சுரேஷ் குமார், பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்துக்கள் கூறி பாராட்டினர்.

