இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த மேஜர் தயான் சந்த் அவர்களை பெருமைபடுத்தும் விதமாக அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-னை கொண்டாடும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் 29.08.2024 அன்று மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் நடைபெறவுள்ளது.
19 வயதிற்குட்பட்ட மற்றும் 25 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாலிபால் மற்றும் 100மீ தடகள போட்டிகளும், 45 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 1கி.மீ நடைபோட்டிகள், 50மீ, 100மீ, சதுரங்கம், கேரம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். 19 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 01.01.2006க்கு பின்னர் பிறந்தவர்களும், 25 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 01.01.2000க்கு பின்னர் பிறந்தவர்களும், 45 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 01.01.1980க்கு பின்னர் பிறந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் 29.08.2024 அன்று காலை 8.00 மணிக்கு உரிய ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் அறிக்கை செய்ய வேண்டும். எனவே தருமபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தேசிய விளையாட்டு தினத்தினை முன்னிட்டு நடைபெறவுள்ள விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சிதலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

