Type Here to Get Search Results !

அரூரில் மதுபோதையில் போலிஸ் வாகனத்தின் கண்ணாடியை உடைத்து தகராறு அரசு ஊழியர்கள் இருவர் கைது.


தருமபுரி மாவட்டம் அரூரில் உள்ள ஊஞ்சல் மாரியம்மன் கோயில்  பகுதியில் இரவு நெடுஞ்சாலை வாகன  ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் முதல்நிலை காவலர் சேகர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில்   பேரேறிப்புதூர் அரசு பழங்குடியினர் பள்ளியில் சமையலராக பணியாற்றும் மருதபாண்டி (34) நள்ளிரவு நேரத்தில் மதுஅருந்து கொண்டிருந்ததை கண்டு அவரை வீட்டிற்கு செல்ல அறிவுறுத்தினர். 


அதற்கு அவர் போலீசாரை தகாத வார்த்தை திட்டி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து ரோந்து காவலர்  அரூர் காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவிக்க அரூர் இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் போலீசார் அங்கு சென்று அவரை வீட்டிற்கு அனுப்ப முயன்றனர். அப்பொழுது அவர் அவர்களிடமும் தகாத வார்த்தையில் பேசியுள்ளார். தொடர்ந்து அவரை வாகனத்தில் ஏற்றி மருத்துவ பரிசோதனை கொண்டு செல்ல முயன்ற போது ரோந்து வாகனத்தின் கண்ணாடி அடித்து உடைத்து சேதப்படுத்தினார்.


இதுகுறித்த போலீசார் அவரது தம்பி  ஹரிகரன் (30) இளநிலை உதவியாளர்க்கு தகவல் தெரிவித்த நிலையில், அவரும் போலீசாரிடம் மரியாதை குறைவாக பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது,ரோந்து வாகனத்தை சேதப்படுத்தியதாகவும்  வழக்குபதிவு செய்யப்பட்டு 2 பேரும்  கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 


சம்பவத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தில்  காயமுற்ற காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன், முதல் நிலை காவலர் சேகர் மற்றும் மகேந்திரன் ஆகியோர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று சென்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies