Type Here to Get Search Results !

மல்லுப்பட்டி ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பங்குச்சந்தையில் மகளிர் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள ஸ்ரீ மூகாம்பிகை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  பாலக்கோடு, வணிக நிர்வாகவியல் துறை சார்பில் ஒரு நாள் தேசிய அளவிலான பங்குச்சந்தையில் மகளிர் முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரியின் தாளாளர், மூகாம்பிகை கே.கோவிந்தராஜ் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்சிக்கு  வணிக நிர்வாகவியல் துறை தலைவர், முனைவர்,  மோகன்தாஸ் வரவேற்புரை வழங்கினார். இதில்  கல்லூரி முதல்வர், முனைவர். இரகுநாதன் மாணவிகள் பங்குச் சந்தையில் எவ்வாறு ஈடுபடுவது மற்றும் மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், பங்குச் சந்தையை மாணவிகள் எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதன் சாதக பாதகங்கள் குறித்து விளக்கினார்.


துணை முதல்வர், முனைவர் முருகேசன், மாணவிகள் பங்குச்சந்தை முதலீட்டை எவ்வாறு  இரண்டாம் நிலை வருவாய் ஆதாரமாக மாற்றுவது என்பது குறித்து விளக்கினார். முனைவர்.காந்தி சிறப்பு விருந்தினர்களை  அறிமுகப்படுத்தினார். 


சென்னை பெருநகர பங்குச் சந்தை லிமிடெட்டின் துணைத் தலைவர், திரு.B.M.காஜா மொஹிதீன் பங்குச் சந்தை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் மற்றும் சென்ட்ரல் டெப்பாசிட்டரி சர்வீசஸ் இந்தியா லிமிடெட்டின், தென் மண்டல மேலாளர்,  M.கார்த்திக் பங்குச் சந்தையின் அபாயங்கள் மற்றும் அதை எப்படி எதிர்கொள்வதென விளக்கினார். நிகழ்ச்சியின் நிறைவில் பேராசிரியை, ஆனந்தலட்சுமி நன்றியுரை வழங்கினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies